Freelancer / 2021 நவம்பர் 07 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
“இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன் இருப்போம்“ என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே வரையான 4.45 கிலோமீற்றர் வீதி, கார்பெட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
" பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். இவ்விரண்டு விடயங்களையும் சிறப்பாக செய்து முடித்தால் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தானாகவே நடக்கும்.
நன்றி மறக்ககூடாது என அனுசியா அம்மையார் குறிப்பிட்டார். எனவே, நெருக்கடியான கால கட்டத்திலும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொருட்களின் விலையேற்றத்தால் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்நிலைமை நீடிக்கின்றது. எனவே, பொறுமை காக்கவும். இன்னும் ஒரு வருடத்துக்குள் நிலைமை சீர் செய்யப்படும்“ என்றார்.
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago