2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிறிய ஸ்ரீபாதையில் இருந்து விழுந்த பிரித்தானிய பிரஜை

Editorial   / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13)  காலை 100 அடி பாறையிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் ஒருவரை எல்ல சுற்றுலாப் பொலிஸார் பெரும் முயற்சியுடன் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்டு தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் என  பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப கலுபான தெரிவித்தார்.

பிரித்தானியப் பிரஜையான இந்த 27 வயதுடைய வெளிநாட்டவர் சிறிய  ஸ்ரீபாத மலையில் இருந்து  சூரிய உதயத்தின் வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையும் தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

எல்ல சுற்றுலாத்துறை பொலிஸ் அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து அவரை மீட்டு, தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

  கீழே விழுந்ததில் அவரது ஒரு காலில் மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாலித்த ஆரிவங்ச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X