2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சிறுத்தை நடமாட்டத்தால், மக்கள் அச்சத்தில்

Janu   / 2026 ஜனவரி 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், குடாகம, விநாயகர் புர பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை  நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரியவருகிறது.

திங்கட்கிழமை (19) இரவு சிறுத்தையொன்று குடியிருப்புக்கு அருகாமையில் வந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளதுடன் குறித்த சிறுத்தை இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட வருவதாகவும் அங்குள்ள வளர்ப்பு நாய்களை காயப்படுத்தி சென்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 எஸ். சதீஷ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X