2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சிறுத்தையால் பீதியில் மக்கள்

Kogilavani   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தில் 12 அடி நீளமுடைய சிறுத்தையொன்று, சட்டவிரோதமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்டு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் தப்பிச் சென்றுள்ளதால், தோட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
சிறுத்தையை தேடும் பணியில், நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு வலைகள் விரிக்கப்பட்டிருந்துள்ளதுடன் அதில் நாயொன்றும் சிறுத்தையும் மாட்டிக்கொண்டுள்ளன என்றும் தெரிய வருகிறது.

நாயை சிறுத்தை வேட்டையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில வலையில் சிறுத்தை மாட்டிக்கொண்டுள்ளதை அவதானித்த தோட்ட மக்கள், அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதுடன், பொலிஸார் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் வருவதற்கு முன்பு சிறுத்தை வலையை அறுத்துக்கொண்டு தப்பிஓடியுள்ள நிலையில், சிறுத்தையை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வலைவிரித்தவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X