2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம் அம்மாவும் காதலனும் கைது

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகப்புத்தகத்தில் நண்பர்களாகி பின்னர் கள்ளக்காதலனாக்கி உல்லாசத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், தன்னுடைய ஏழு வயதான மகளையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சிறுமியின் தாய்  மட்டுமன்றி அவளுடைய கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவில் வசிக்கும் இந்தப் பெண்ணின் கணவன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். முகப்புத்தகத்தின் ஊடாக பலருடன் நண்பர்களாகிய இந்தப் பெண் அதில் ஒருவருடன் கள்ளக்காதல் கொண்டுள்ளார். 

பெண்ணின் வீட்டுக்கு வரும் அந்த நபர், தன்னுடைய கள்ளக்காதலியுடன் பல தடவைகள் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனிடையே அப்பெண்ணின் ஏழு வயதான மகளுடன் உறவை வைத்துக்கொள்வதற்கு கள்ளக்காதலியிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் இடமளித்தும் உள்ளார்.

தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் அச்சிறுமி தன்னுடைய மாமியிடம் கூறியுள்ளார். இதுதொடர்பில் மாமியார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னரே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X