Janu / 2025 ஜூன் 16 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுளந்தாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான நபர் ஒருவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியின் காதலனின் நண்பரான ,சிரிகல பொத்துவில்106 பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் மற்றும் அதே பிரதேசத்தை சேர்ந்த மற்றொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 8 ஆம் திகதியன்று மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளதுடன் அவர் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பாக 9 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் சிறுமி 10 ஆம் திகதி வீட்டிற்கு வந்ததையடுத்து அவரது தாயார் அவளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது,
குறித்த சிறுமி அவரது காதலனின் நண்பர்கள் இருவரை சந்திக்க தனது மூன்று தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நிலையில் சிறுமியின் காதலனின் நண்பர்கள் இருவர், காதலன் அனுப்பிய பணத்துடன் வந்துள்ளனர்.
சிறுமியின் தோழிகள் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதுடன் சந்தேக நபருடன் வந்தவரும் சென்றுள்ளார்.
சந்தேக நபர் இரவு 7.30 மணி வரை பேருந்து நிறுத்தத்தில் சிறுமியுடன் இருந்துள்ளதுடன் பின்னர் அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் சிரிகல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு சென்றுள்ளார். குறித்த வீட்டில் இருந்த நபருடன் தொடர்பு கொண்டதையடுத்து அவர் இருவரையும் பின் கதவு வழியாக வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.
குறித்த சிறுமி குறித்த வீட்டில் சந்தேக நபருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதுடன் இதன் போது பல தடவைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமனசிறி குணதிலக
12 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago