Janu / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளை 16 வயது வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ள சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக காணாமல் போன சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கையில், தனது 16 வயதுடைய மகள் சாமிமலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் தனது மாமி வீட்டில் இரவு தங்கி இருந்த நிலையில் தானும் தன் மனைவியும் தோட்ட பணிக்கு சென்றிருந்த வேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
மகள் பெயர்லோன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் எட்டு வரை கல்வி பயின்றுள்ளதுடன் அதன் பின்னர் நோய் ஏற்பட்ட காரணத்தால் இடை நடுவில் படிப்பை நிறுத்தியுள்ளார். மகள் இரவு நேரத்தில் தனது மாமியார் வீட்டில் தங்குவதாகவும் வழக்கம் போல் தங்கள் இருவரும் பணி முடித்து வந்து பார்த்த போது மகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வியாழக்கிழமை (04) இன்று காலை சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்றை அப் பகுதியில் கண்டதாகவும் அதில் இருந்த இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வேன் , இலக்கம் PH.8233 கொண்ட வெள்ளை நிற சிறிய ரக வேன் என அடையாளம் கண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போண சிறுமியின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0522277222 எண் மூலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .