Freelancer / 2024 ஓகஸ்ட் 24 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
11 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 14 வயதுடைய சிறுவன் பிடிபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இடம் பெற்று உள்ளது.
சம்பவம் சம்பந்தமாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்,
பெரிய தந்தையின் மகளை (11 வயது) அவரது இல்லத்தில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற போது பெரிய தந்தை திடீர் என வீட்டிற்கு வந்ததால் சிறுமி காப்பாற்றப்பட்டு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரிய தந்தை கொடுத்த புகாரின் பேரில் சந்தேகநபரான 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது நீதவான் சந்தேக நபரை எதிர் வரும் 4 ம் திகதி வரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தலைநகரில் பணி புரிந்து வருகிறார் எனவும் தந்தை அன்றாட தொழிலுக்கு வெளியே சென்று தற்செயலாக வீட்டிற்கு வந்ததால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளமை தெரிவந்துள்ளது. R
38 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago
50 minute ago