R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
கித்துல்கல- ஹெல்அரம்ப பிரதேசத்தில் 14 வயது சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய நபரை இந்த மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ருவன்வெல்ல நீதவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளான சிறுவன் ஜூலை மாதம் 18ஆம் திகதி, தனது தாயுடன் கித்துல்கல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 38 வயதான திருமணமாகாத சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் சந்தேகநபரால், கடந்த ஆண்டிலிருந்து 6 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுவன் கரவனெல்ல நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சிறுவன் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் பிரதேசவாசிகளின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago