2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சிறுவனை வன்புணர்ந்த பக்கத்து வீட்டு தந்தை கைது

Janu   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 பிள்ளைகளின் தந்தையான 56 வயதான நபர், தனது வீட்டுக்கு அண்மையில் வசிக்கும் 11 வயதான சிறுவனை பல தடவைகள் கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கித்துல்கொடே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனான மாணவன், தனக்கு  நேர்ந்ததை தனது வகுப்பாசிரியையிடம் தெரிவித்ததை அடுத்து, அந்த ஆசிரியை பொலிஸூக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரான அந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான அந்த தந்தை, அந்த சிறுவனின் வீட்டிலும் தன் வீட்டிலும் வைத்து அவ்வப்போது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன், வைத்திய பரிசோதனைக்காக தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X