Editorial / 2024 ஏப்ரல் 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், பி.கேதீஸ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை 02 மணியளவில் திடீர் தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கந்தை தோட்டத்தில் இயங்கிய வரும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணை செய்து வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதா? அல்லது நாசகார சதியா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகிலேயே மக்கள் குடியிருப்புகளும் உள்ளன. பாரிய வெளிச்சம் ஏற்பட்டதன் பின்னர் புகை நாற்றத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அதன்பின்னரே, அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்த தீயினால் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் கூரை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கல்வி கற்கும் சிறார்களின் புத்தகங்கள்,உபகரணங்கள் தீயில் கருகியுள்ளன.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago