Editorial / 2024 ஜூன் 30 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் ஓட்டிச் சென்ற காரொன்று வீதியை விட்டு விலகி சிற்றோடைக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.
நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி சிற்றோடையில் கவிழ்ந்ததில் காரில் பயணித்த பெண் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் தியசிறிகம பிரதேசத்தில் சனிக்கிழமை (29) மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நோர்வூட் பொலிஸார், புதிய சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற பெண் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கார் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .