2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சிவனடியில் பெண் சரணம்

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

களனி பகுதியைச் சேர்ந்த 69 வயதான புஸ்பரோகினி   சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

சிகப்பு அம்பலம் பகுதியில் வைத்து திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து,  அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டார்.   

மஸ்கெலியாவில் திடீர் மரண விசாரணை அதிகாரி இன்மையால், அவரது சடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .