Kogilavani / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, எதிர்வரும் 5ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கண்டம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்தப் போராட்டமானது, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான போராட்டமே தவிர, அரசியல் இலாபத்துக்கான போராட்டம் அல்ல என்பதை, சிவநேசன் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி தலைவரும் கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளருமான ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதி, சம்பள நிர்ணயச் சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தச் சம்பளமாக 1,000 ரூபாபாயை நிர்ணியப்பதற்கான பேச்சுவார்தை இடம்பெறவுள்ள நிலையில் அப்பேச்சுவார்த்தைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், பெருந்தோட்டங்களில் 5ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இ.தொ.காவின் இந்தத் தீர்மானத்துக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ராஜமணி பிரசாத் மேலும் தெரிவித்துள்ளதாவது, விசேடமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சில உறுப்பினர்களே, இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என்றும் இவர்களின் விமர்சனம் அரசியல் இலாபத்துக்கானது என்றும் சாடினார்.
தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் காட்டிக்கொடுப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் இவ்வாறு அறிக்கை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டுஒப்பந்தத்தில் மூன்று தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடுகின்ற நிலையில், கூட்டுஒப்பந்தத்திலிருந்து இ.தொ.காவை மட்டும் வெளியேறக் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் தெரிவித்தார்.
அத்துடன் காலம்காலமாக கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை இடம்பெறும்போது, முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக பெருந்தோட்ட மக்கள் அழுத்தம் கொடுத்தே வந்துள்ளனர் என்றும் பல்வேறு போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டே சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
'வெறுமனே பேச்சிவார்த்தையூடாக மட்டும் சம்பள அதிகரிப்பைப் பெற்றுவிட முடியாது, வெளியில் இருந்து வழங்கப்படும் ஆதரவுகள், அழுத்தங்களினூடாகவே சம்பள பேச்சுவார்த்தையின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். மாறாக அரசியல் வங்குரோத்து காரணமாக தொழிற்சங்கங்களை காட்டிக்கொடுப்பதால், சம்பள அதிகரிப்பை பெற்றிட முடியாது என்பதை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் உணர்ந்துக்கொள்ள வேண்டும்' என்றும் அவர் ராஜமணி பிரசாத் மேலும் தெரிவித்தார்.
24 minute ago
32 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
53 minute ago