2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’சிவனொளிபாத மலை பருவகாலம் திட்டமிட்டப்படி இடம்பெறும்’

Kogilavani   / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி, ஏ.ஏ.எம்.பாயிஸ்

சிவனொளிபாத மலையின் பருவகாலம் (2020-2021) வழமைபோல இடம்பெறும் என்று,  பெல்மதுளை கல்பொத்தாவலை ஸ்ரீ ரஜமகா விகாரையின்  விகாராதிபதியும் சிவனொளிபாத மலையின் தலைமை விகாராதிபதியுமான பெங்கமுவே தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். 

டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று, சிவனொளிபாத மலையில் பருவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உலகளவில்  காணப்படுவதாகவும் இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்படுகின்ற நிலையில், சமய நிகழ்வுகளை நாம் ஒத்திவைக்கவோ அல்லது அதனை கைவிடுவதோ சிறந்தது அல்ல என்றும் தெரிவித்தார். 

திட்டமிட்டப்படி பருவகால யாத்திரை, டிசெம்பர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதனை முன்னிட்டு, டிசெம்பர் 28ஆம் திகதி, பெல்மதுளை கல்பொத்தாவலை ஸ்ரீ ரஜமகா விகாரையிலிருந்து  சமன் தெய்வத்தின் திருவுருவச்சிலை, அதன் ஆடை, ஆபரணங்கள் என்பன வழமைபோல் பொல்மதுளை- அவிஸ்ஸாவளை (ஹட்டன்), பெல்மதுளை – பலாங்கொடை, பெல்மதுளை – இரத்தினபுரி (பலாபத்தல), பெல்மதுளை- குருவிட்ட ஆகிய நான்கு வீதிகள் வழியாகவும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் என்றார்.

இதன்போது சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களும் முறையாகக் கடைப்பிடிக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X