R.Tharaniya / 2025 மார்ச் 02 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலை யாத்திரையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கியதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (02) காலை 7.30 மணியளவில் நோர்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோட்டன் பிரிட்ஜ் சந்தியின் அருகில் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரும் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பிறகு (02) ஆம் திகதி வீடு திரும்பிக் கொண்டிருந்த வேலையில். எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டிக்கு வழிவிட முயன்றபோது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்து விபத்து தொடர்பில் விசாரணை நடத்தி வரும் நோட்டன் பிரிட்ஜ் பொலிசார், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பருக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோட்டார் சைக்கிள் அதிவேகமாக இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.





35 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago