2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சிவனொளிபாத யாத்திரைக்கு அரசாங்க அனுசரணை

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சிவனொளிபாத மலை யாத்திரை, இம்முறை முதல் தடவையாக, அரசாங்கத்தின் அனுசரணையோடு நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, புனித புத்தர் சிலை, புனித பூஜைப் பொருள்களுடனான பெரஹரா யாத்திரை, எதிர்வரும் 27ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் நாதிசைகளில் இருந்து, சிவனொளிபாதமலை புனித தளத்தைச் சென்றடையவுள்ளது.

இதன் பிரகாரம், பலாபத்வல, குருவிட்ட, பலாங்கொடை, அவிசாவளை ஆகிய வழிகளில், இந்த ஊர்வலங்கள, கொரானா வைரஸ் தடுப்பு சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோரது இணைத் தலைமையில், இரத்தினபுனரி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நான்கு ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் பக்தர்களது எண்ணிக்கையை, 1 ஊர்வலத்துக்கு 50 பேர் என்ற வீதம் கட்டுப்படுத்தல், வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தல், வழமையான வீதிப் பூஜைகளை நடத்தாமல் இருத்தல், வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளில் கடமையாற்றுவோருக்கு, பிசிஆர் பரிசோதனை நடத்தல், 5 ஊர்வலங்களில் கலந்துகொள்ள விரும்புவோர்,  தமது பிரதேச செயலாளரது அனுமதிச் சான்றிதழ் பெறல், நான்கு வீதிகளிலும் தொற்று நீக்கல் செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .