Editorial / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா சீதா எலியாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புனித ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆழமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளின் அடையாளமாகத் திகழ்கிறது.
தொடர்ந்து, அசோக வனத்தில் அன்னை சீதா தேவியை அனுமன் சந்தித்த இடமாகக் கருதப்படும் பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயிலுக்கும் சென்ற துணை ஜனாதிபதி, அங்குள்ள அனுமனின் புனித பாதச் சுவடுகளை வணங்கி மரியாதை செலுத்தினார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சீதா அம்மன் ஆலயம் புனரமைக்கப்படும் என்று அறிவித்திருந்ததை இதன்போது நினைவு கூர்ந்த துணை ஜனாதிபதி, இத்தகைய முன்னெடுப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .