Janu / 2024 மார்ச் 12 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களால் வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை செவ்வாய்க்கிழமை (12) மதிய நேர உணவு இடைவேளையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இதன்போது சுகாதார சேவையை முன்னெடுப்பவர்களின் சேவை, பதவி மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
அத்துடன் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த மேலதிக கொடுப்பனவு கோரிக்கை விடயத்தை அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டு குற்றம் சுமத்தியுள்ளனர் .
மேலும் இவ் வைத்தியசாலையில் கடமையாற்றும் 72 தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்





4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago