2025 மே 08, வியாழக்கிழமை

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பண்டாரவளை மரக்கறி சந்தை மீண்டும் திறப்பு

Kogilavani   / 2020 நவம்பர் 08 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச 

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்ட பண்டாரவளை மரக்கறி தொகை சந்தை, நாளை மறுதினம் (10) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பண்டாரவளை நகரசபை தலைவர் ஜனக்க நிஷாந்த ரத்னாயக்க தெரிவித்தார்.

மேற்படிச் சந்தையில், கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காப்பட்டதையடுத்தை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டதுடன், 166 பேர் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்படாததால் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சந்தையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பண்டாரவளை நகரசபையின் பிரதான பொதுசுகாதார பரிசோதகர் டி.எம்.ஏ.ஆர் திஸாநாயக்க தெரிவித்தார்.

சந்தையைத் திறப்பதற்கு முன்பாக, கிருமிதொற்று நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X