2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’சுகாதார பரிந்துரைகளுக்கு செவிசாயுங்கள்’

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கு, சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பது அனைவரினதும் கடமை என்று வலியுறுத்தியுள்ள மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.சக்திவேல், குறிப்பாக பெருந்தோட்ட மக்கள், பொதுசுகாதார அதிகாரிகள் கூறும் அறிவுரைகளைக் கேட்டால் மட்டுமே, அதிலிருந்து மீள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

'மலையகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக மலையகத் தோட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது பாரிய விளைவை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகக்கூட இருக்கலாம். வீடுகள் நெருக்கமாகக் காணப்படுவதால் கொரானா வைரஸ் இலகுவாக பரவ வாய்ப்புள்ளது. அரசாங்கம் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டால் மட்டுமே, அதிலிருந்து தப்பிக்க முடியும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X