பா.திருஞானம் / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட வெதமுல்ல, லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் (கயிர்கட்டி தோட்டம்). 12 வருடங்களாக மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வரும், கே. உதயதீப் (வயது 26), என்பவர், சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு தனக்கு உதவுமாறு, கோரிக்கை விடுத்துள்ளார்.
இறம்பொட இந்து கல்லூரியில், தரம் 7இல் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது, திடீரென இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், இன்று வரை பல்வேறு சிகிச்சைகள் பெற்றும், இவர் மாற்றுத்திறனாளியாகவே வாழ்ந்துவருகின்றார்.
கனகராஜ் (வயது 52), சுத்தரம்பாள் (வயது 53), ஆகியோரின் ஒரேயொரு புதல்வரே, இவ்வாறு உதவி கோரியுள்ளார்.
மன தைரியம் கொண்டுள்ள தனக்கு உதவி கோரியுள்ள அவர், தனது தாய் தந்தையர்கள், இதற்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்து வந்தனர் என்றும் எனினும், தற்போத ஓய்வு பெற்று, மரக்கறி தோட்டங்களில் பணிபுரிந்தே, வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தாய், தந்தையர்கள், தனக்காக யாசகம் கூட ஏந்தியுள்ளனர் என்று கூறியுள்ள அவர், 26 வயதான தனக்கு, சுயதொழில் செய்யவோ விபாயாரம் செய்யவோ யாரேனும் உதவ முன்வந்தால், தன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் மாற்றுத்திறனாளியான தனக்குத் தேவையான எந்தவொரு வதியும் தனக்கு இல்லை என்றும் சக்கரக் கதிரை கூட இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செயலிழந்துள்ள தனது கால்களை சுகப்படுத்துவதற்கு, ஆரம்பத்தில் தனக்கு உதவியர்களுக்கு நன்றி கூறியுள்ள அவர், தற்போது தனது கால்களுக்கு உணர்வு கிடைத்துள்ளது என்னும் எனினும், எழுந்து நடப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு, தன்னிடம் பணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago