Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
4. சிங்கமலை சுரங்கத்தில் அரங்கேறும் புதிய வியாபாரம்
4. மலைக்குருவிகளைப் பாதுகாக்க முன்வருமாறு கோரிக்கை
ரஞ்சித் ராஜபக்ஷ
சூப் வைப்பதற்காக மலைக்குருவிகளின் கூடுகளை உடைத்து விற்பனை செய்யும் வியாபாரத்தில், விஷமிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என, ஹட்டன் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மலைக்குருவிகள் கட்டும் கூடுகளை வைத்து, ஒருவகை சூப் செய்யப்படுவதாகவும் இந்தச் சூப்பானது, 25,000 தொடக்கம் 35,000 ரூபாய் வரை விலைபோவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூப்பில் அதிகளவு போசணை இருப்பதால், ஹோட்டல்களுக்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், இந்தச் சூப்பையே அதிகம் விரும்பி வாங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில், இந்தச் சூப்புக்கு அதிகளவு கிராக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக, இரவு வேளைகளில் மலைக்குருவிகளின் கூடுகளை உடைக்கும் விஷமத்தானமான செயற்பாட்டில், சிலர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், சிங்கமலை சுரங்கப்பகுதியிலேயே, மலைக்குருவிகளின் கூடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ரயில்கள் பயணிக்காத நேரம் பார்த்து வரும் விஷமிகள், மலைக்குருவிகளின் முட்டைகளை எறிந்துவிட்டு, கூடுகளை மட்டும் எடுத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரவு வேளைகளிலேயே, மலைக்குருவிகளின் கூடுகள் உடைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரவு வேளைகளில் சுரங்கப்பாதை வழியாகப் பயணிக்கும் பயணிகள் சிலர், இதனை நேரடியாக் கண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மலைக்குருவிகள் தங்களது உமிழ்நீரிலேயே, கூடுகளைக் கட்டுவதாகவும் இவ்வாறு கட்டப்படும் கூடுகள் வலிமை மிக்கதாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கமலை சுரங்கப்பாதை வளாகத்தில், காலை வேளைகளில், உயிரிழந்த நிலையில் மலைக்குருவிக் குஞ்சுகள் மற்றும் முட்டைகள் சிதறிக் கிடப்பதை பரவலாகக் காண முடியுமென்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுரங்கத்தின் உயரமான பகுதிகளில் இருக்கும் கூடுகளை எடுப்பதற்காக, விஷமிகள், மூங்கிலால் செய்யப்பட்ட ஏணியைப் பயன்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கூடுகளை அதிக விலைகொடுத்து வாங்குவதற்காக, வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹட்டனுக்கு வருவதாகவும் சிங்கமலை சுரங்கப்பகுதி மட்டுமன்றி, மலைக்குருவிகள் எங்கெல்லாம் கூடுகளைக்கட்டுகிறதோ, அந்தப் பகுதிகளிலும் இந்த வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, விஷமிகளிடமிருந்து மலைக்குருவிகளைப் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago