Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
லுணுகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடுல்சீமை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களால், மாதாந்தம் கட்டப்படும் வாடகைக் கட்டணம் 1,450 ரூபாயிலிருந்து 4,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட விவகாரத்துக்கு, பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரான செந்தில் தொண்டமானால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மடுல்சீமை நகர வர்த்தகர்களால், செந்திலின் கவனத்துக்குக்
கொண்டுவரப்பட்டதை அடுத்து, லுணுகலை பிரதேச சபையின் தலைவருடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தார்.
அத்துடன் பழைய வாடகை கட்டணத்தையே வர்த்தகர்களிடம் அறவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, மீண்டும் வர்த்தகர்களிடம் பழைய கட்டணத்தையே அறவிடுவோமென
உறுதிப்படுத்திய கடிதத்தை லுணுகலை பிரதேச சபையின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago