Editorial / 2021 மே 08 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தேயிலை சபைக்கு கீழ் இயங்கும் தலவாக்கலை சென் கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலைய பிரதேசத்தை உள்ளடக்கிய சென்கூம்ஸ் கீழ் பிரிவு ,டேம் டிவிஷன் உள்ளிட்ட ஆராய்ச்சி நிலைய வட்டாரப் பகுதி ஆகியன முடக்கப்பட்டன.
இங்கு ஒரே நாளில் 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் லிந்துலை பிரதேச பொது சுகாதார பிரிவு இந்த முடக்க நடவடிக்கையை முன்னெடுத்ததாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு மையத்தின் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
சென் கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் 30 பேருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் அறிக்கை நேற்று (07) மதியம் கிடைக்கப்பட்ட நிலையில் 30 பேரில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்கள், சிகிச்சை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இவர்களுடன் தொடர்பு பேணிய குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
மறு அறிவித்தல் வரை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்டத்திலிருந்து மக்கள் வெளியே செல்வதும் தோட்டத்துக்குள் உள்நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளதுடன் தோட்டத்துக்கு செல்லும் நான்கு வழிகளும் மூடப்பட்டன. அங்கு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago