2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சேவை நிறுத்தப் போராட்டத்தில் தனியார் பஸ்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன்- டெம்பஸ்டோ ஊடாக, ஹைட்ரி வரை பயணிக்கும்  தனியார் பஸ்கள்  இரண்டாவது நாளாகவும் சேவை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

குறித்த வீதியில், ஏழு பஸ்கள் சேவையில் ஈடுபடுவதுடன், தற்போது புதிதாக ஒரு பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, தனியார் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாத நிலையில், மத்திய மாகாண  பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மேலும் ஒரு அனுமதிப்பத்திரம்
வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, வழங்கப்பட்டுள்ள அனுதிப்பத்திரத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என பஸ் உரிமையாளர்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X