Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 22 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
150 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த நுவரெலியா நகரின் அழகுக்கு பெருமை தேடி கொடுக்கும் " சைப்ரஸ்" மரங்கள் விறகுக்காக வெட்டப்படுகின்றன.இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது எவருக்கும் தெரியாமல் உள்ளது.
இது தொடர்பில், நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் நுவரெலியா சுற்றாடல் பாதுகாப்பு குழு தலைவருமான மஹிந்த தொடபேகமகேயும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியாவில் கடந்த 150 வருடங்களுக்கு முன் நாட்டப்பட்ட மரங்கள் கடந்த பல வாரங்களாக வெட்டப்படுகிறது. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியாமல் உள்ளது.
நுவரெலியாவில் உள்ள பாரிய "சைப்ரஸ் " மரங்களின் கிளைகளை வெட்டுவதாக கூறி மரங்கள் மொட்டையாக வெட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவதால் நுவரெலியாவின் இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.
அத்தோடு மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாயமும் உண்டாகும். நுவரெலியா நகரிலுள்ள " சைப்ரஸ்" மரங்களை விறகுக்காக வெட்ட அனுமதித்த பலசாலி யார்? கிளைகளை வெட்டுகிறோம் என்ற போர்வையில் பல வாரங்களாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் தர்மபால சுற்று வட்டாரத்துக்கு அருகிலுள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த இடம் ஒரு தனியார் ஹோட்டல் உரிமையாளரின் வாகன தரிப்பிடமாக தற்பொழுது காட்சியளிக்கின்றது. நுவரெலியா நகரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இரு பக்கங்களிலுள்ள விலையுயர்ந்த சைப்ரஸ் மரங்களும் காரணமின்றி வெட்டப்படுகின்றன.
நுவரெலியா மாநகரசபையில் நகரை அழகு படுத்துவதற்கான ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில் நுவரெலியா நகரிலுள்ள சகல அரச திணைக்களத்திலுள்ள உயர் அதிகாரிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
அந்தக் குழுவிலும் அனுமதி பெறாமல் இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவதால் நுவரெலியா நகரத்துக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நகரிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஹிந்த தொடம்பேகமகே மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025