2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சொகுசு பஸ்களில் சுகாதார வழிகாட்டல்கள் மீறப்படுகின்றன

R.Maheshwary   / 2021 நவம்பர் 11 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி, ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் சொசுகு பஸ்களில், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன்- நுவரெலியாவுக்கிடையில் சுமார் 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடும் நிலையில், சில நடத்துனர்களும் சாரதிகளும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு குறித்த வீதியில் ஈடுபடும் சொகுசு பஸ்கள் சிலவற்றில் பயண டிக்கட் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த பஸ் சாரதிகளிடம் வினவியபோது, ஹட்டன்- நுவெரெலியா வீதியில்  குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே சேவையில் ஈடுபடுவதால், தாம் ஆசனத்துக்கு மேலதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X