Sudharshini / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ், கு.புஷ்பராஜ்
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை உட்பட கணவன், மனைவி ஆகியோரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது லிந்துலைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த ஜீப் வண்டியானது கார், லொறி மற்றும் வர்த்தக நிலையத்துடன் மோதி விபத்துக்கள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கார், லொறி மற்றும் வர்த்தக நிலையத்துக்கும் பாரிய சேதம்; ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago