2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாநகரசபை உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்

Kogilavani   / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாநகர சபை உறுப்பினர் பி.விக்னேஸ்வரனை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கண்டி உதவித் தேர்தல் ஆணையாளர் நாமல் தலங்கமவுக்கு அனுப்பியுள்ளார்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறும் வகையில் செயற்பட்டதாலேயே, கண்டி மாநகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து, ஜனநாயக மக்கள் முன்னணியால் நியமிக்கப்பட்ட 'பட்டியல் உறுப்பினர்' நீக்கப்பட்டுள்ளார் என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கே.ரி.குருசாமி விளக்கமளித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X