Freelancer / 2023 மார்ச் 23 , மு.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
ஜனாதிபதியாக பதவியேற்று பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் இன்று அதல பாதாளத்துக்குச் செல்லவிருந்த நாட்டை மீட்டெடுத்து கொடுத்துள்ள பெருமை ரணில் விக்ரமசிங்கவையே சாரும். கட்சி வேறு கொள்கை வேறாக காணப்பட்டாலும் மக்கள் சேவகன் என்ற ரீதியில் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு ரணிலுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு போனஸ் ஆசனத்தின் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாகியிருந்தாலும் தன்னால் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்ற நம்பிக்கையில் செயற்பட்டார். பின்னோக்கி சென்று கொண்டிருந்த நாட்டை முன்னேற்றமான பாதையில் செல்ல வழியேற்படுத்தி கொடுத்துள்ளார் என்றார்.
இனி வரும் காலங்களிலாவது பொருட்களின் விலைகளை குறைத்து அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டு மக்களை நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வர வேண்டும்.
அதே சந்தர்ப்பத்தில் மக்கள் தற்போது தேர்தலையும் வைக்க கோருகின்றனர் எனவே ஜனாநாயகத்தை பின்பற்றி தேர்தலையும் உடனடியாக வைக்க ரணில் விக்ரமசிங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago