2025 மே 03, சனிக்கிழமை

‘ஜனவரியில் கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை’

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஜனவரி மாதம் முதல், கட்டாயம் 1,000 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி, இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு, தோட்டத் தொழிலாளர்கள் எவ்வளவு பங்களிப்பை வழங்கினாலும், அவர்களது வாழ்க்கை மேம்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என, கடந்த கால அரசாங்கங்கள் உறுதி மொழி வழங்கியிருந்தும், அது இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சட்டபூர்வமான பத்திரத்துக்குப் பதிலாக மாற்று பத்திரமே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“2021 ஜனவரி முதல், 1,000 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்படும் என, அரசாங்கத்தின் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும் இதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு இணங்காவிட்டாலும்,  அந்தத் தொகையை அரசாங்கம் வழங்குவதற்கான நிதி, பட்ஜட்டில் ஒதுக்கப்படவில்லை. கம்பனிகள் சுவீகரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. எது எப்படியிருந்தாலும் இம்முறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X