R.Maheshwary / 2022 ஜூன் 01 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை பகிர்ந்தளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமானின் அழுத்தம் அதிகமாக காணப்படுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பொருள்களை ஜீவன் தொண்டமானுக்கு தேவையானவர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதாக ஜீவன் தொண்டமான் எம்.பியின் பிரத்தியேக செயலாளர் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
5 minute ago
14 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
56 minute ago