Gavitha / 2020 நவம்பர் 25 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
டயகம - நட்பொன் தோட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், நேற்று (24) இனங்காணப்பட்டுள்ளார் என, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய இந்த நபர், கடந்த 22ஆம் திகதியன்று, நெட்பொன் தோட்டத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், குறித்த நபரிடம், கினிகத்தேனை, கலுகல்ல பகுதியிலுள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் முடிவுகளின்போதே, இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரை அழைத்துச் செல்வதற்காக அம்பியூலன் வந்தபோதும், தோட்டப் பாதை குன்றும் குழியுமாக இருந்தமையால், வீட்டுக்கு அருகிலேயே, அம்பியூலன்ஸைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தொற்றுக்கு உள்ளான நபர், 3 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று, அம்பியூலன்ஸில் ஏறிய பின்னர், அவர் ஹம்பாந்தோட்டையிலுள்ள சிகிச்சை நிலையத்துக்கு அடைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026