Kogilavani / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் இராமைய்ய பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று (27) இரவு வெளியான பிசிஆர் பரிசோதனை அறிக்கையிலேயே தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நகரசபையின் உறுப்பினருக்கு ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவருடன் பிறந்த தின நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நகரசபையின் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளியான நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago