2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

டியன்சின் மதுபானசாலைக்கு சீல்

Janu   / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின், பொகவந்தலாவ டியன்சின் பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டதாக கொட்டகலை கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மதுபான சாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சனிக்கிழமை (06) அன்று கலால் திணைக்கள அதிகாரிகள்  குறித்த மதுபானசாலைக்கு சென்று ஒரு மதுபான போத்தல்கள் கொள்வனவு செய்த போது அதிக விலைக்கு விற்பனை செய்தமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த மதுபானசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான தண்டப்பணம் செலுத்தும் வரை குறித்த மதுபானசாலையை திறக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி  மற்றும் கொட்டகலை கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

எஸ். சதீஷ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X