2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

டிராக்டர் கவிழ்ந்து விபத்து சாரதி காயம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆரியவங்ச 

பதுளை வெவஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த உழவு இயந்திரம் (டிராக்டர்)  புதன்கிழமை (16)  பிற்பகல் வீதியை விட்டு விலகி தேயிலைத்தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

அதில் காயமடைந்த டிராக்டரின் சாரதி  பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என  பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை – வெவஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த ஆர். புகழ்நாதன் (47) என்பவரே படுகாயமடைந்தார்.

உழவு இயந்திரம் வெவஸ்ஸ தோட்ட காரியாலயத்தில் இருந்து தொழிற்சாலையை நோக்கி பயணித்த வேளையில் சுமார் 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்த பதுளை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X