2025 ஜூலை 21, திங்கட்கிழமை

டெங்குத் தொற்று விழிப்புணர்வு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

டெங்குத் தொற்றுத் தொடர்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மாத்தளை நகரில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம்,  இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாத்தளை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி சானக டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக, மாத்தளை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கமைவாக, மாத்தளை நகருக்கு வந்த வாகனங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில், இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மாத்தளை மாவட்டத்தில் மட்டும், கடந்த எட்டு மாதங்களில், 2150 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த எட்டு மாதங்களில், 140,325 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .