2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

டெங்குவால் பதுளை மாணவன் பலி

Freelancer   / 2021 நவம்பர் 07 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, ஊவா மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்கும் 10 வயது மாணவன் டெங்கு நோயின் காரணமாக உயிரிழந்துள்ளார் என,  பதுளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பதுளையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்கந்த, ஹிந்தகொட, பதுலுப்பிட்டிய பெரும்பாலான நோயாளர்கள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைதினம் வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பதுளை பொது வைத்தியசாலையில் 25 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பதுளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் டெங்கு பரவும் இடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் ரணில் பிரியங்கர தெரிவித்தார்.

அண்மையில் கல்கந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​நுளம்புகள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள் இனங்காணப்பட்டு, குடியிருப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X