2026 ஜனவரி 21, புதன்கிழமை

டெவன் தோட்டத்திலும் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை- சென்கிளையார் தோட்ட டெவன் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் அத்தோட்ட
நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நேற்று (6) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அத்தோட்டத்தில் தொழிலாளர்களால் தொடர்ச்சியாக விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள்
அவர்களால் கைவிடப்பட்டிருந்த நிலையில் அதில் மீண்டும் விவசாயம் செய்ய தொழிலாளர்கள்
முற்பட்டபோது அதற்கு தோட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அத்தோட்ட தொழிலாளர்கள்
தெரிவிக்கின்றனர்.


இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என அணிதிரண்ட அத்தோட்ட தொழிலாளர்கள்
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவன் பகுதியில்
வீதியின் ஒரு பக்கத்தில் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு 
போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X