2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாக்குதலில் இருவர் படுகாயம் : ஏழு பேர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, குருதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் மற்றும் யுவதி மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதான எழுவரையும், எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் கயான் அத்தநாயக்க, செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

யட்டியாவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இளைஞனும் யுவதியும், (இவ்விருவரும் காதலர்கள் என தெரியவருகின்றது) திங்கட்கிழமை மாலை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞன், சித்திரை புத்தாண்டு நிறைவுற்றதன் பின்னர், உறவினரை பார்ப்பதற்காக, தனது காதலியுடன் முச்சக்கரவண்டியில் கட்டுகஸ்தோட்டை, யட்டியாவல பிரதேசத்துக்குச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில், முச்சக்கர வண்டியை முறையற்ற வகையில் நிறுத்தியதாகக் கூறி, யட்டியாவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மேற்படி இளைஞனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அவ்விளைஞனையும் இளைஞனுடன் சென்ற யுவதியையும் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேரை, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .