Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 11 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ்.கௌசல்யா, எஸ்.சுஜிதா
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் நிலவிவரும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, மாணவரின் பெற்றோர், மேற்படி கல்லூரிக்கு முன்பாக, நேற்று (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பாடசாலையில் அனைத்து வசதிகளும் காணப்பட்டாலும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளதெனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இதன் காரணமாக தமது பிள்ளைகள் கல்வியில் பின்னடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுத் தெரிவித்த அவர்கள், எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேபாலவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago