2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

துப்பாக்கி, தோட்டாக்களுடன் சென்றவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி மற்றும் 9 தோட்டாக்ளை  கொண்டுச் சென்ற  ஐவருக்கு,  கண்டி மேலதிக  நீதவான்  ரங்கனீ கமகே, தலா 35,000 ரூபாய்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை செலுத்துவதற்காக, எதிர்வரும் 5 ஆம் திகதி  மீண்டும் இவர்களை  நீதிமன்றில் ஆஜராகும்படியும்  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குருநாகல்,  மாஸ்பொத்த, அங்கும்புரை ஆகிய  பிதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஐவரும், கெப்  ரக வாகனமொன்றில், துப்பாக்கி, தோட்டாக்களுடன் சென்ற போது, அங்கும்புரையில் வைத்து  கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இப் பிதேசத்தில் வேட்டையாடுவதற்கு சென்றதாகக் கூறப்பட்டாலும்  புதையல் தோண்டுவதற்காகவே சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X