2025 ஜூலை 05, சனிக்கிழமை

தீபாவளி தினத்தில் கறுப்புக் கொடி ஏந்துவோம்

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபாய் சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி கொண்டாடுவோம்' என டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் தெரிவித்தனர்.

டிக்கோயா, சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று(6) காலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.
 
“எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சர்களான திகாம்பரம், மனோகனேசன்,  இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான்  ஆகியோர் பேசுகின்றார்களே தவிர 1000 ரூபாய் சம்பள உயர்வு எந்தவகையில் பெற்று கொடுக்கப் போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்தவில்லை. எனவே அதனை எமக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
 
தொழிலாளர்களை பகடை காய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம்கொடுக்க போவதில்லை. நாங்கள் விழித்துகொண்டோம். எங்களுடைய பண்டிகை காலத்தில் மட்டும் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது' என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .