Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 03 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜ், பா.திருஞானம், எஸ்.சதீஸ்
தீபாவளி திருநாளை முன்னிட்டு தமக்கான பண்டிகை முற்பணத்தை முன்கூட்டி வழங்க வேண்டும் என கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (03) ஆர்ப்பாட்டங்கள் முன்னெக்கப்பட்டன.
அக்கரபத்தனை, பெரியநாகவத்தை, பெல்மோரல் மற்றும் கிரன்லி கீழ் பிரிவுதோட்டடங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள தீபாவளி முற்பணத்தை முன்கூட்டியே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை காலம் தாழ்த்தாமல் பெற்றுக்கொடுக்க மலையக அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
'அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும்; தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக கூறிய பொய்யான வார்த்தைகளை இனிமேலும் நாங்கள் நம்பப்போவதில்லை', 'சம்பள அதிகரிப்பை பெற்றுகொடுக்காவிட்டால், மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தை உடனடியாக நிறுத்துவோம்' என இதன்போது தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தை 3 ஆம் திகதி வழங்குமாறு கேட்டபோதும், தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாக இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, இறம்பொடை, பெரட்டாசி தோட்டம், மேமொழி பிரிவு, அயரி பிரிவு, பூச்சிகொட பிரவு, மேரியல் பிரிவு, ரஸ்புரூக் பிரிவு, பெரட்டாசி பிரிவு உட்பட 06 பிரிவுகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி முற்பணத்தை முன்கூட்டி வழங்குமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட முகாமையாளரிடம் தீபாவாளி முற்பணத்தை கேட்டபோது, 'கம்பனி கொடுத்தால் தருகின்றேன். இல்லா விட்டால் ஒன்றும் செய்ய முடியாது' என பொறுப்பிலாமல் பதில் கூறியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பொகவந்தலாவ கிலானி, மோரா, தெரெசியா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் தீபாவளி முற்பணத்தை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகைக்கான கொடுப்பனவுகளை, தோட்ட நிர்வாககம் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க மலையக அரசியல் வாதிகள், தோட்டநிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அம் மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
3 hours ago