Gavitha / 2020 நவம்பர் 26 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்.
மலையக மக்களுக்கு, 50 ரூபாயைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள், போலிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என, பொதுஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட பிராந்திய இணைப்பு செயலாளர் வி. புஸ்பானந்தன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு, பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, இந்த 1,000 ரூபாய் கிடைக்கவுள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்து வருவதாகவும் எந்தக் காரணத்துக்காகவும், ராபக்ஷர்கள் அரசாங்கம், யாருடைய அழுத்தங்களுக்கும் அஞ்சுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர் சங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் வழங்கிய அழுத்தம் காரணமாகவும், மலையக மக்கள் மீது கொண்ட அதீத அன்பு காரணமாகவுமே, இந்த 1,000 ரூபாய் சமப்ளம வழங்குவது தொடர்பில், இந்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026