Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிஸ் என்டனி
முச்சக்கரவண்டியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இருவரையும் 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய, புதன்கிழமை(26) உத்தரவிட்டுள்ளார்.
இரத்தினபுரி, பட்டுகெதர பகுதியில் வைத்து கடந்த 13ஆம் திகதி காணாமல் போன முச்சக்கரவண்டியை, கஹவத்தை பகுதியிலிருந்து மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் செவ்வாய்;க்கிழமை (15) கைதுசெய்தனர்.
முச்சக்கரவண்டியானது பகுதி பகுதியாக கழற்றப்பட்டு விற்பனை செய்வதற்கு தயார்நிலையில் இருந்தபோது மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி இருவரையும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார், அவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரினார்.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய நீதவான் குறித்த இருவரையும் 24 மணித்தியாலம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago