2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தெல்தெனிய பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

திகனை மாபேரிதென்னையில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரும், அவ்விருவரையும் ஏற்றிவந்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக தெல்தெனிய பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (29) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்களை கண்டித்து, தெல்தெனிய நகரில் பேரணியாகச் சென்றோர், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், தமிழ் தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திகனை, மாபேரிதென்னதோட்டம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றீடாக காணிகள் இதுவரை வழங்கப்படவில்லை.

அங்கு விமானம் நிலையம் அமைப்பதற்காக சுமார் 150 வருடங்களாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாகவும், சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றீடாக எந்தக் காணிகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கண்டியில் திங்கட்கிழமை (27) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டதை ஏற்பாடு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு இருவரை பொலிஸார் வரவழைத்துள்ளனர். பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அவ்விருவரையும் கைதுசெய்ததுடன், மேற்படி இருவரையும் முச்சக்கரவண்டிகளில் அழைத்துவந்த முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமையைக் கண்டித்தும், சட்டவிரோதமான முறையில் நால்வரை கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே நேற்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .