Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ்
தெள்ளுப்பூச்சி பரவியதால் போடைஸ் தமிழ் வித்தியாயத்தின் ஆரம்பப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளதுடன் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.பி.இராஜசேகரம் தெரிவித்தார்.
இன்று வழங்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக சனிக்கிழமை தினமொன்றில் பாடசாலையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
'மேற்படி பாடசாலையின் ஆரம்பிப்பிரிவில் இன்று காலை, திடீரென தெள்ளுப்பூச்சி பரவியதால் பாடசாலை மாணவர்கள் கற்றலில் இடையூறை எதிர்கொண்டனர். இதனால், ஆரம்பப் பிரிவை மூடியதுடன் அம்மாணவர்களுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டது.
தெள்ளுப் பூச்சி தொடர்பில் புளியாவத்தைக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.

37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago