2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இரண்டாவது மகளிர் தினம்

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்   

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது மகளிர் தினம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் பிரதம அதிதியாகவும் இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன் விசேட அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இந்நிகழ்வில், அக்கரப்பத்தனை, டயகமை, லிந்துலை, தலவாக்கலை, பத்தனை, கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், புளியாவத்தை, வட்டவளை, நாவலப்பிட்டி ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்த மகளிர் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இந்த மகளிர் தினம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று, புதன்கிழைமை ஹட்டன் பணிமனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், உதவிச்செயலாளர் வீரப்பன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X